உள்ளடக்கத்துக்குச் செல்

கீரோன் பொல்லார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீரோன் பொல்லார்ட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கீரோன் பொல்லார்ட்
உயரம்6 அடி 5 அங் (1.96 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதம்-விரைவு
பங்குசகலதுறை ஆட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 134)ஏப்ரல் 10 2007 எ. தென்னாபிரிக்கா
கடைசி ஒநாபபிப்ரவரி 03 2011 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்55
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா T20I முதல் ஏ-தர
ஆட்டங்கள் 32 20 20 53
ஓட்டங்கள் 546 190 1,199 1,184
மட்டையாட்ட சராசரி 18.82 12.66 37.46 26.90
100கள்/50கள் 0/1 0/0 3/5 0/7
அதியுயர் ஓட்டம் 62 38 174 87
வீசிய பந்துகள் 954 258 571 1,452
வீழ்த்தல்கள் 30 11 6 59
பந்துவீச்சு சராசரி 28.36 32.72 52.16 21.15
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 3/27 2/22 2/29 4/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 11/– 32/– 24/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 7 2011

கீரோன் அட்ரியன் பொல்லார்ட் (Kieron Adrian Pollard, பிறப்பு: மே 12, 1987)[1], மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் இவர் வலதுகை துடுப்பாளரும்,[1] வலதுகை மித-விரைவு பந்துவீச்சாளரும் ஆவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இவர் சதர்ன் ரெட்பேக்ஸ் மற்றும் சாமர்செட் ஆகிய இரு அணிகளுக்காகவும் உள்ளூர் இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார்[1]. 2010 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் அதிக விலையில் இவரை மும்பை இந்தியன்ஸ் ஏலத்தில் எடுத்தது. தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடாமல் 100 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் விளையாடியுள்ள இரண்டு வீரர்களுள் ஒருவர் ஆவார்.[2]

இந்தியன் பிரீமியர் லீக்

[தொகு]

பொல்லார்ட் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சிறப்பாக [3] விளையாடியதன் மூலம் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இவரை ஏலத்திற்கு எடுக்கசென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவியது. இறுதியில் 750,000 அமெரிக்க டாலர் மதிப்பில் 2010 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது.

மார்ச் 17, 2010 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பெரோசா கோட்லா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது முதல்போட்டியில் விளையாடினார்.[1] இந்தப்போட்டியில் 13 பந்துகளில் 45 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 5 ஆறுகளும் அடங்கும். மேலும் 2 வீரர்களை ரன் அவுட் ஆக்கினார். இந்தத் தொடரின் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். பின் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான அரைறுதிப் போட்டியில் 13 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களை எடுத்தார். இதில் 3 ஆறுகளும் அடங்கும். மேலும் 3 இலக்குகளைக் கைப்பற்றினார். 1 எதிரணி வீரரரை ரன் அவுட் ஆக்கினார். இந்தப் போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது பெற்று அணியை இறுதிப் போட்டிக்குச் செல்ல உதவினார். ஆனால் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி கண்டது.

2011,2012

[தொகு]

2011 ஆம் ஆண்டில் களத்தடுப்பாட்டத்தில் சிறப்பாக விளையாடிய போதிலும் பந்துவீச்சு மற்றும் மட்டையாளராக சரியான திறனை வெளிப்படுத்தவில்லை. 2012 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் 66 ஓட்டங்களை எடுத்தார். அதில் 6 நான்குகளும், 4 ஆறுகளும் அடங்கும்.பின் 44 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இதுவே அவரின் சிறந்த பந்துவீச்சாகும்.

2013 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மகேந்திரசிங் தோனி அடித்த பந்தை சிறப்பான கேட்ச் பிடித்து வீழ்த்தினார். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார்.இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெறி பெற்றது. பின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக வான்கேடே அரங்கத்தில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் 4 ஓவர்களில் 60 ஓட்டங்கள் எடுக்கவேண்டியிருந்த சமயத்தில் அணித்தலைவர் ரோகித் சர்மாவுடன் இணைந்து 27 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களி எடுத்து அணி வெற்றி பெற உதவினார். பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மும்பை அணி 52 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 இலக்குகளை எடுத்து தடுமாறியது. பின் 32 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களெடுத்து அணியின் ஓட்டம் 148 ஆவதற்கு உதவினார். பின் 1 இலக்குகளை வீழ்த்தி மும்பை அணி முதல் முறையாக கோப்பை வெல்வதற்கு உதவினார்.

ஓய்வு

[தொகு]

பன்னாட்டு வெள்ளைப்பந்து துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வெடுக்கப் போவதாக 2022 ஏப்ரல் 20 ஆம் நாள் அறிவித்தார். இருப்பினும் இருபது 20 மற்றும் பத்து 10 போட்டிகளில் தனது ஆட்டத்தைத் தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.[4]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Kieron Pollard", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-10
  2. "Records tumble as Amla, de Kock lead SA prance in Kimberley". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
  3. "IPLT20.com - Indian Premier League Official Website", www.iplt20.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-05-10
  4. "Kieron Pollard retires from international cricket". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.

வெளியிணைப்புகள்

[தொகு]

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: கீரோன் பொல்லார்ட்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரோன்_பொல்லார்ட்&oldid=3990830" இலிருந்து மீள்விக்கப்பட்டது